டி.டி.ஹெச் விவகாரம் : ‘விஸ்வருபம்’ படத்தால் தியேட்டர்காரர்களுக்கு உண்மையிலேயே நஷ்டம் வருமா..?
படத்தின் பெயரைப் போலவே கமலின் ‘விஸ்வரூபம்’ படம் டி.டி.ஹெச் பிரச்சனையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
அதாவது ‘விஸ்வரூபம்’ படத்தை முதல் முறையாக தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு
சுமார் 8 மணி நேரத்துக்கு முன்பாக இந்தியாவிலுள்ள எல்லா டி.டி.ஹெச்சிலும்
ஒளிபரப்பு செய்யப்போகிறார் கமல்.
இதுதான் தியேட்டர்காரர்களின் மத்தியில் கடும் எதிர்ப்பை
சம்பாதித்திருக்கிறது. ஆனால் இதனால் தியேட்டர்காரர்களுக்கு எந்த நஷ்டமும்
ஏற்படப் போவதில்லை என்கிறார் திருச்சியைச் சேர்ந்த டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
அசோசியேஷனில் முக்கியமான பொறுப்பில் இருக்கும்
ஒருவர். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது…
கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தை டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்வது அதுவும்
ரிலீசுக்கு முன்பாக ஒரே ஒரு காட்சி மட்டும் அவ்வாறு செய்வதென்பது அந்தப்
படத்துக்கு ஒரு பப்ளிசிட்டி என்ற முறையில் தான் நாம் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
தியேட்டர்காரர்கள் சொல்வது போல கமலின் இந்த முடிவால் அவர்களுக்கு எந்த
வகையிலும் நஷ்டம் வரப்போவதில்லை. மேலும் கமல் முழுக்க முழுக்க அவருடைய
சொந்தப் பணத்தில் தான் இந்த ரிஸ்க்கை எடுக்கிறார். அப்படி இருக்கும் போது
அதை நாம் கண்டிப்பாக வரவேற்க வேண்டும்.
[ஒருவேளை படம் ஓடவில்லை என்றால்
கமலுக்கு தியேட்டர்காரர்கள் எந்த விதத்திலும் பணம் கொடுக்கத் தேவையில்லை.
ஆனால் படம் ஓடினால் வரும் பணத்தில் தியேட்டர்காரர்களுக்கு கமல் பாதி பணத்தை கொடுப்பார்.]
கமலைப் பொறுத்தவரை அவர் எந்த தியேட்டரிலும் மினிமம் கியாரண்டி அல்லது
எப்.எக்ஸ் முறையில் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யவில்லை, அப்படி செய்தால் கூட
தியேட்டர்காரர்களுக்கு நஷ்டம் வரும் என்று சொல்லலாம். ஆனால் அவர் சொந்தமாக
தியேட்டரில் ரிலீஸ் செய்து வரும் பணத்தை இருவரும் சரிசமமாக பங்கிட்டுக்
கொள்ளலாம் என்று தான் சொல்கிறார். அப்படி இருக்கும் போது
தியேட்டர்காரர்களுக்கு நஷ்டம் வரும் என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை.
அந்தப் படம் ஓடினால் அவருக்கு லாபம், ஓடாவிட்டால் அவருக்குத்தானே நஷ்டமே
தவிர தியேட்டர்காரர்கள் இதில் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.
ஒருவேளை படம் ஓடவில்லை என்றால் கமலுக்கு தியேட்டர்காரர்கள் எந்த
விதத்திலும் பணம் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் படம் ஓடினால் வரும் பணத்தில்
கமல் தியேட்டர்காரர்களுக்கு பாதி பணத்தை கொடுப்பார். இதுதான் உண்மையான
நிலவரம் என்றார் அவர்.
மேலும்.., கமல் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த ஹேராம் என்ற படத்தை ரிலீஸ்
செய்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியைச் சந்தித்து தியேட்டர்காரர்களுக்கு
நஷ்டத்தை தந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட அந்த படத்தால் நஷ்டமடைந்த
எல்லோருக்கும் நியாயமான முறையில் பணத்தை திருப்பிக் கொடுத்தார் என்றார்.
சரி உண்மையிலேயே விஸ்வரூபம் படத்தை டி.டி.ஹெச்சில் ரிலீஸ் செய்தால் தியேட்டர்காரர்கள் பாதிக்கப்படுவார்களா..?
தியேட்டர்காரர்களுக்கு நஷ்டமில்லை எப்படி?
+ எல்லா தியேட்டர்களிலும் கமல் சொந்தமாகத்தான் படத்தை ரிலீஸ்
செய்யப்போகிறார். இந்தப் படத்தை யாருக்கும் விநியோகம் செய்யும் உரிமையை
அவர் கொடுக்கவில்லை.
+ படம் ரிலீஸ் ஆவதற்கு சுமார் 8 மணி நேரத்துக்கு முன்பாக ஒரே ஒரு காட்சி மட்டும் தான் டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்யப்போகிறார்.
+ டி.டி.ஹெச்சை பொருத்தவரையில் ஒரு புது படத்தை பார்ப்பது என்பது movie
on demond என்ற முறையில் தான் ஒளிபரப்பு செய்யப்படும். அதாவது இந்தப்
படத்தை நீங்கள் டி.டி.ஹெச்சில் பார்க்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட
டி.டி.ஹெச் நிறுவனம் நிர்ணயிக்கும் பணத்தை முன்பாகவே சப்ஸ்க்ரிப்ஸன் என்ற
முறையில் செலுத்த வேண்டும். அவ்வாறு சப்ஸ்க்ரிப்ஸன் செய்தவர்கள் மட்டுமே
படத்தை பார்க்க முடியும்.
+ அதேபோல தானாக எந்த டி.டி.ஹெச் நிறுவனமும் தங்களது சந்தாதாரர்களிடம்
நீங்கள் இந்தப் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்த
முடியாது. சந்தாதாரர்கள் விரும்பினால் மட்டுமே போன் மூலம் ஆர்டர் செய்தோ
அல்லது அவர்கள் கொடுத்திருக்கும் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் செய்தோ படத்தை
பார்க்க முடியும்.
+ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இந்தப் படத்தை ஒளிபரப்பு செய்வதால்
தமிழ்நாட்டில் கடுமையான மின்வெட்டு இருக்கின்ற சூழ்நிலையில் பல பேர்கள்
அந்த குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க விரும்ப மாட்டார்கள். ஆக அவர்கள்
விருப்பப்படி தியேட்டருக்கு வந்து தான் படத்தை பார்க்கும் சூழ்நிலை வரும்.
+ தமிழ்நாட்டில் மட்டும் வீடியோகான், டாடாஸ்கை, ஏர்டெல், சன் டைரக்ட்,
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி என ஐந்து நிறுவனங்களின் டி.டி.ஹெச் இணைப்புகள்
சுமார் 36 லட்சம் உள்ளது. ஆனால் இந்த இணைப்புகளில் எத்தனை பேர்கள் மூவி ஆன்
டிமாண்ட் என்று சொல்லக் கூடிய பணம் கொடுத்து படம் பார்க்கும் முறையை
தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறிய ஒரு விஷயமாக உள்ளது.
குறிப்பாக மின்வெட்டு பிரச்சனை அதிகம் உள்ள கிராமப்புறங்களில் இது
சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கும்.
டி.டி.ஹெச் ஒளிபரப்பில் இப்படி பல பிரச்சனைகள் இருக்கும் போது
தியேட்டர்காரர்கள் பாதிக்கப்படுவோம் என்று சொல்வது சரியானதா..?
சம்பந்தப்பட்டவர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
No comments:
Post a Comment