அடேங்கப்பா..? : ஒரே படத்துக்கு 5 மாதங்கள் கால்ஷீட் கொடுத்த அனுஷ்கா
சினிமாவில் இருக்கும் பிரபல ஹீரோயின்களிடம்
தொடர்ச்சியாக ஒரு மாதம் கால்ஷீட் வாங்குவதென்பதே குதிரைக் கொம்பான விஷயம்.
ஆனால் இதில் விதிவிலக்காக நடிகை அனுஷ்கா ஒரே படத்தில் நடிக்க சுமார் 5
மாதங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.
தனது கால்ஷீட் விவகாரங்களை தானாகவே பார்த்துக் கொள்ளும் அனுஷ்கா நடிகை
இலியானவைப் போல சொதப்பாமல் கரெக்ட்டாக தான் ஹீரோயினாக நடிக்கும்
படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார். ஒருவேளை ஒரு புதிய படத்தின்
தன்னால நடிக்க முடிவவில்லை என்றால் தனக்கு மிக நெருக்கமான ஹீரோயின்களுக்கு
அந்தப் படத்தை அவர் சிபாரிசு செய்கிறார்.
இதுவரை அவர் நடித்த எந்த தெலுங்கு, தமிழ்ப்படங்களுக்கும் அதிகப்பட்சம் 1
மாதத்துக்கு மேல் கால்ஷீட் கொடுத்ததில்லை. ஆனால் செல்வராகவன் டைரக்ஷன்
செய்த இரண்டாம் உலகம் படத்திற்கு 2 மாதங்கள் கால்ஷீட் கொடுத்தார். அட
அனுஷ்கா இப்படி என்று மொத்த கோலிவுட்டும் திகைத்துக் கொண்டிருக்க இப்போது
அவர் புதிதாக நடிக்கும் ஒரு தெலுங்கு படத்துக்கு சுமார் 5 மாதங்கள்
கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
அதாவது அவர் தான் நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி என்ற தெலுங்கு
படத்திற்கு யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 5 மாதங்களுக்கு கால்ஷீட்
கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரெடியாகும் இந்த படம் 13-ஆம்
நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும்
படம் என்பதால் இத்தனை நாட்கள் கொடுத்திருக்கிறார் அனுஷ்கா.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் ஷுட்டிங் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
No comments:
Post a Comment