December 3, 2012


மாற்றணும்... மாற்ற மாட்டேன்..

கோடம்பாக்கத்தில் ஒரு குடுமிப்பிடி


சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு முடிந்து படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவித்துவிட்டார்கள்.
ஆனால் இயக்குனர் சுராஜுக்கும் அப்படத்தின் ஹீரோ கார்த்திக்குக்கும் இடையே நடந்த சூடான விவாதங்கள் படத்தை விட பெரிய ஹாட்டாக இருக்கும் போலிருக்கிறது.

ஒரு ஹீரோ முழுமையாக நம்பி இயக்குனரிடம் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும். இதுதான் எல்லா இயக்குனர்களின் ஆசையாகவும் இருக்கும். ஆனால் கார்த்தியை பொருத்தவரை அதற்கு வாய்ப்பே இல்லை. தனது பட இயக்குனர்களிடம் லேசாக ஆலோசனை கூறுகிற அளவுக்கு சுதந்திரத்தை வைத்துக் கொள்வார். இவரே ஒரு காலத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் என்பதால் இந்த சுதந்திரத்தை மதிக்கவும் செய்வார்கள் இயக்குனர்கள். ஆனால் இந்த வேலையெல்லாம் சுராஜிடம் நடக்கவே இல்லையாம்.
திடீரென சில காட்சிகளை சுட்டிக்காட்டிய கார்த்தி, இவற்றை ரீஷுட் செய்யலாமே என்று ஆலோசனை சொல்ல, அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லையாம் அவர். அதுமட்டுமல்ல, என் நாலெட்ஜுக்கு வராமல் படத்தில் எவ்வித கரெக்ஷனும் செய்யக் கூடாது என்று எடிட்டர், கேமிராமேன் ஆகியோருக்கும் உத்தரவிட்டு விட்டாராம். இதனால் சற்று அப்செட் ஆன கார்த்தி, நேரடியாகவே சுராஜிடம் பேச, சுராஜ் கேட்ட ஒரு கேள்வியில் கார்த்தி ஆஃப் என்கிறார்கள்.

இதற்கு முன்பு வந்த சகுனி படத்திலும் கூட நீங்கள் சொல்லி நிறைய கரெக்ஷன் நடந்தது. ஆனால் அப்படத்தின் ரிசல்ட் என்ன? நீங்களே சொல்லுங்க. இது என் படம். நீங்க ஹீரோ. அவ்வளவுதான் என்றாராம் கறாராக. எவ்வித கரெக்ஷனும் இல்லாமல்தான் வெளிவருகிறது அலெக்ஸ் பாண்டியன்.

வாதத்திற்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு?

No comments:

Post a Comment