February 22, 2013



m[pj; - KUfjh]; $l;lzpapy; gpsT

 ரெட்டை தல' என்று டைட்டில் வரைக்கும் முன்னேறிய அஜீத்-முருகதாஸ் கூட்டணி அவ்வளவு சீக்கிரம் டமால் ஆனதற்கு என்ன காரணம்? 'நான் அஜீத் சார் படம் இப்போ பண்ணல. இந்தி படம் பண்ணிட்டு... அப்புறம் கமல் சார் படம் பண்ணிட்டு...' என்று இழுவோ இழு என இழுக்கிறார் முருகதாஸ். இதுக்கெல்லாம் என்ன காரணம்?

கோடம்பாக்கத்தில் கொக்கி போட்டு விசாரித்தால், கிடைக்கிற தகவல்கள் செம ஹாட்டாக இருக்கிறது. இதில் அஜீத் பெயரையும் நாசமாக்குவார்கள் போலிருக்கிறது. நிஜமோ, பொய்யோ, தகவல் சொன்ன சோர்ஸ் சத்தியவான்கள் என்பதால் அப்படியே இங்கே-
அஜீத்-முருகதாஸ் இணையும் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க துடித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்தது ஏ.ஜி.எஸ் நிறுவனம். இருவருமே இந்த மூன்றெழுத்து நிறுவனம் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள் என்பதாலும் ரஜினி படத்தை தயாரிக்கப் போகிற நிறுவனம் என்பதாலும் (இந்த படத்திலும் ஒரு சிக்கல் உருவாகியிருக்கிறதாம். அது என்ன என்பதை நாளைக்கு சொல்கிறோம்) உடனே ஒப்புக் கொண்டார்கள் இருவரும்.
சம்பளத்தை பற்றி பேச்சு வார்த்தை ஆரம்பித்த பிறகுதான், நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடி மரத்தை அறுக்கிறோம் என்ற ஃபீலிங்கே இல்லாமல் பேச ஆரம்பித்தார்களாம் இருவரும். சுமார் 23 கோடியை சம்பளமாக கேட்டாராம் அஜீத். எனக்கு பதினைஞ்சு என்று அநியாயத்துக்கு ஆசைப்பட்டாராம் முருகர்.
அதற்கப்புறமும் அங்கே பேச்சு வார்த்தை நடத்த மூன்றெழுத்து நிறுவனத்திற்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

No comments:

Post a Comment