ghyh ,af;fj;jpy; tp[a;

 
 நாலு வருஷம் ஒரு படத்தை 
எடுப்பார், கதையே சொல்ல மாட்டார் கால்ஷீட் மட்டும் தரணும்... என்றெல்லாம் 
யார் பேசினாலும் இன்றைய தேதியில் இயக்குனருக்கான மரியாதையை கட்டி காக்கும்
 ஒரேயொரு இயக்குனர் உண்டென்றால் அது பாலாதான். 
இவரது
 படத்தில் நடிப்பது சித்ரவதை என்றுதான் இதுவரை நடித்தவர்கள் 
கூறியிருக்கிறார்கள். ஆனால் அந்த வதையை அனுபவிக்க முன்னணி நடிகர்கள் 
க்யூவில் நிற்கிற மர்மம்தான்.. பாலா.
சமீபத்தில்
 பேட்டியளித்த விஜய், பாலாவின் படத்தில் நடிக்க ஆசை என்று 
தெரிவித்திருந்தார். பால அழைத்தால் பாதி சம்பளத்தில் கதை கேட்காமல் நடிக்க
 விஜய் தயார். இன்றைய தேதியில் வேறு எந்த இயக்குனருக்கும் இப்படியொரு 
ஸ்பெஷல் ஆஃபர் விஜய் தருவாரா என்பது சந்தேகமே. சந்தேகம் என்ன, தர மாட்டார் 
என்பதுதான் உண்மை.
ஆனால் பாலாவிடம் கேட்கப்பட்ட கேள்வி வேறு. அஜீத்தை இயக்குவீர்களா?
நந்தா
 படத்தின் கதையை பாலா முதலில் அஜீத்திடம்தான் கூறினார். அஜீத் கதையில் 
சில திருத்தங்கள் செய்ய சூர்யா ஹீரோவானார். பிறகு நான் கடவுளில் 
நடிப்பதற்காக உடல் எடையெல்லாம் குறைத்தார் அஜீத். கடைசியில் காலுடன் 
மானத்தையும் வாரினார் பாலா. இப்படியொரு சிச்சுவேஷனில்தான் இந்தக் கேள்வி, அஜீத்தை இயக்குவீர்களா...?
நடக்கணும்னு
 உள்ளது நடக்கும், நடக்காதது எப்போதுமே நடக்காது என்ற தொனியில் சித்தன் 
போக்கு சிவன் போக்கில் ஒரு பதிலை சொல்லியிருக்கிறார் பாலா. 
விஜய்
 சிக்கினாலும் அஜீத் பாலாவிடம் சிக்க மாட்டார் என்றே தெரிகிறது. 
என்னதான் ஆனாலும் அஜீத் தானே முளைத்த காட்டுச் செடி இல்லையா. 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment