February 22, 2013

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கிடைகாத விருது 

 தனுஷ் ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். ஆனால் அவரது மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை. 1975 ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அதன் பிறகு பெரிய ஹீரோவாகி சூப்பர் ஸ்டாரானார். அவர் சீரியஸான ஆக்ஷன் படங்கள், நகைச்சுவை படங்கள் என பல வகை படங்களில் நடித்து கலக்கியுள்ளார். அவரை பின்பற்றி சில நடிகர்கள் காமெடியில் கலக்குகின்றனர்.
ரஜினியின் மூத்த மகள் ஜஸ்வர்யாவை மணந்தவர் தனுஷ்.  2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான தனுஷ் தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராக உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வந்து 38 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு இதுவரை தேசிய விருது கிடைக்கவில்லையே. தனுஷ் நடிக்க வந்த 8வது வருடமே அதாவது 2010ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். ஆடுகளம் படத்திற்காக தான் அந்த விருது அவருக்கு கிடைத்தது.தலைவா, தலைவா என்று ரசிகர்கள் கொண்டாடும் ரஜினிக்கு எப்பொழுது தேசிய விருது கிடைக்குமோ?

No comments:

Post a Comment