தலைவா அரசியல் படமா? விஜய் விளக்கம்
விஜய் நடித்த துப்பாக்கி படம் 100 நாட்களை தாண்டி ஓடுகிறது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது.
இந்தியில் கஜினி, 3 இடியட்ஸ், தபாங், ரவுடிரத்தோர், ரெடி படங்கள் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்தன. அந்த பட்டியலில் விஜய்யின் துப்பாக்கி படமும் சேர்ந்துள்ளது.
இதுகுறித்து விஜய் அளித்த பேட்டி வருமாறு:-
துப்பாக்கி படத்தின் வசூல் ரூ. 100 கோடி தாண்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தியேட்டர்களுக்கு அதிக இளைஞர்கள் வருகை, பெரிய வியாபாரம் மர்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்ற பல காரணங்களால் இது சாத்தியமாகி உள்ளது.
துப்பாக்கி படத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் எனக்கு பொறுப்பு கூடி இருக்கிறது. இன்னும் நல்ல படங்கள் பண்ணுவேன். நான் நடித்துக் கொண்டிருக்கும் தலைவா படம் அரசியல் படம் அல்ல. அரசியல் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இல்லை. படம் பார்க்கும்போது தலைவா என்ற தலைப்பு வைத்ததன் நோக்கம் தெரியவரும்.
பாசில், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். நேசன் இயக்கும் ஜில்லா படமும் அந்த வரிசையில் வரும்.
No comments:
Post a Comment