வித்யாபாலனைப் போலவும் நடிக்கத் தயார்-நயன்தாரா 
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில சர்ச்சைகளுக்கு பின், வெற்றிகரமாக, தன் 
இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள, நயன்தாரா, சமீபத்தில் தெலுங்கில் 
வெளியான, "கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்ற படத்தை, பெரிதும் 
நம்பியிருந்தார். இந்த படத்தின் மூலம், தெலுங்கில், உச்சத்துக்கு போய் 
விடலாம் என,  நினைத்திருந்தார். ஆனால், படம்,  ஊற்றிக் கொண்டது 
மட்டுமல்லாமல், இதில், நயன்தாராவின் நடிப்பு, அவ்வளவாக,  ரசிகர்களை 
ஈர்க்கவில்லை.  விமர்சனங்களும், நயனுக்கு எதிராகவே வந்தன.  இதனால், 
கவலையடைந்துள்ளார், அவர். "என்னுடைய திரையுலக வாழ்க்கையை, ஏதாவது ஒரு 
படத்தை வைத்து, முடிவு செய்வது சரியல்ல. பல படங்கள், இன்னும் கைவசம் உள்ளன.
 அவை அனைத்துமே, நல்ல கதையம்சம் உடைய படங்கள். அந்த படங்கள் வெளியான பின் 
பாருங்கள். தெலுங்கிலும், தமிழிலும், மீண்டும் பிரபலமாகி விடுவேன் என, 
நம்பிக்கையுடன் கூறுகிறார், நயன்தாரா.
 
 விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், அஜீத், ஆர்யா, டாப்சி நடிக்கும் புதிய 
படத்தில், ஹீரோயினாக நடித்து வருகிறார், நயன். இந்த படத்தில், நயன்தாரா, 
நீச்சல் உடையில் நடிப்பதாக வதந்திகள் வெளியாகின. இதைப் பார்த்ததும், 
நயனுக்கு டென்ஷன் எகிறி விட்டதாம். "யார் தான், இப்படி புளுகு மூட்டைகளை 
அவிழ்த்து  விடுகிறார்களோ, தெரியவில்லை. ஏற்கனவே சில படங்களில் நீச்சல் 
உடையில் நடித்தேன். இதற்கு பின், அது தவறு என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே,
 மீண்டும் ஒருமுறை அந்த தப்பை செய்ய மாட்டேன். இந்த படத்தில், எனக்கு 
கிளாமரான வேடம் என்றாலும், நீச்சல் உடை போன்ற காட்சிகள் எதுவும் இல்லை 
என்கிறாராம், நயன்தாரா.
இந்தியில் வித்யாபாலன் நடித்த கஹானி படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நயன்தாரா 
கமிட்டாகியுள்ளார். இந்த வேடத்தில் நடிக்க ஆரம்பத்தில் அனுஷ்கா, ஹன்சிகா 
உள்ளிட்ட சில நடிகைகள் தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால், சமீபகாலமாக 
நயன்தாரா நடிப்பில் சிறந்து விளங்குவதால், அவருக்கு அந்த வேடம் பொருத்தமாக
 இருக்கும். அவரால்தான் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தை நிறைவு செய்ய 
முடியும் என்று மற்ற நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு நயனை கமிட் 
பண்ணியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வித்யாபாலன் நடித்த வேடத்தில் நடிப்பது பற்றி கூறும் 
நயன்தாரா, அவர் நடித்த வேடத்தில் நடிப்பது ரொம்ப சவாலான விசயம். அதனால் 
நல்லமுறையில் ஹோம்ஒர்க் செய்து அந்த வேடத்தில் நடிக்கப்போகிறேன் என்றும் 
சொல்லும் நயன்தாரா, சிலர் எதிர்காலத்தில் வித்யாபாலன் நடிப்பது போல் 
முத்தக்காட்சி, குளியல் காட்சி போன்றும் நடிப்பீர்களா? என்று 
கேட்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை கிளாமராக நடிக்க வேண்டும் என்பதில் 
தற்போது உடன்பாடில்லை. இருப்பினும், அந்த கதைக்கு அப்படி நடித்தால்தான் 
சரியாக இருக்கும் என்று இயக்குனர்கள் எனக்கு தெளிவுபடுத்தும்போது தவிர்க்க
 மாட்டேன். வித்யாபாலன்கூட அப்படி எல்லா படத்திலும் நடித்திருக்க மாட்டார்.
 அவசியப்பட்ட படங்களில்தான் நடித்திருப்பார். அதனால் அவர் போன்று 
தேவைப்பட்டால் நானும் நடிப்பேன். அதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை 
என்கிறார் நயன்தாரா