கவுதம் மேனனுக்கு படம் திருப்பதி பிரதர்ஸ் திட்டம்
கடலுக்குள் இருக்கும் போது கம்பீரமாக இருந்த திமிங்கலம்
கரை ஒதுங்கிய பிறகு காக்காவுக்கும் பூனைக்கும் கூட டிபனாக மாறிவிடுவதை
பார்த்தால் லேசாக மனசில் ஷாக் அடிக்கும். அப்படி
தன் கம்பீரத்தை இழந்த படைப்பாளியாகிவிட்டார் மணிரத்னம். இந்த நேரத்தில்
இழந்த நஷ்டத்தை மீட்பதற்காக அவரை போலீஸ், கோர்ட் என்று கொண்டு வந்து
நிறுத்தவும் துடிக்கிறார்கள் பணத்தை போட்டு ஏமாந்தவர்கள்.
'நானெல்லாம் மணி சார் படத்தை பார்த்து
சினிமாவுக்கு வந்தவன். அவர்ட்ட பணத்தை திருப்பி கேட்க மாட்டேன்' என்று
மூன்று ஏரியாவில் பணம் போட்டு முதலுக்கே மோசமான லிங்குசாமி சொல்கிறார்
என்றால், அதுதான் ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளிக்கு தருகிற மரியாதை.
போகிற போக்கை பார்த்தால் 'மரியாதை ராமன்'
என்று பட்டம் கொடுக்கிற அளவுக்கு அவரது செயல் இன்னும் இன்னும் மேலோங்கி
நிற்கிறது.
அதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
சூர்யா கால்ஷீட்டை யார் வாங்குவது என்பதில் பலத்த போட்டி. நேரடியாக
களத்தில் இறங்கி போராடிய லிங்குசாமி, அந்த விஷயத்தில் கவுதமை வென்றது
தனிக்கதை.இதில் அப்செட்டாகி இருந்த கவுதமுக்கு தனது
நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்க சொல்லி கேட்டிருக்கிறாராம்
லிங்கு.
ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரிக்கவிருக்கும் திருப்பதி பிரதர்ஸ்
நிறுவனம், அதில் ஒரு படத்தைதான் இயக்க சொல்லி கேட்டிருக்கிறது கவுதம்
மேனனிடம்.
No comments:
Post a Comment