சினிமா வாய்ப்பு தருவதாக என் பெயரில் மோசடி: டைரக்டர் சசிகுமார் அறிக்கை
சினிமா டைரக்டர் எம்.சசிகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
“சினிமா என்கிற பிரமாண்ட உலகை நோக்கி ஆர்வத்தோடு வருகிறவர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரவேற்கத்தக்கத்துதான்.
ஆனாலும், எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்கிற ஆவலில் தவறான
ஆட்களை நம்பி சிலர் ஏமாந்துவிடுவது வருத்தமளிக்கிறது.
சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர் சினிமா வாய்ப்புத் தருவதாக சிலரைத்
தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு
ஆட்களைத் தேர்வு செய்யும்போது நேரடியாக என் கம்பெனிக்கே அழைத்துப்
பேசுவதுதான் வழக்கம்.
போனிலோ, இமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வழக்கம் கிடையாது. என்
பெயரில் போலி இமெயில் முகவரிகளையும், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளையும்
சிலர் ஆரம்பித் திருக்கிறார்கள். இதுநாள் வரை சமூக வலைத்தளங்கள் எவற்றிலுமே
நான் இல்லை.
அதனால், வலைத்தளத் தகவல்களையோ இமெயில்களை வைத்தோ என் படத்தில் நடிக்க
வாய்ப்பு கொடுப்பதாகச் சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக,
சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க
வேண்டும்.
காரணம், சினிமா உலகம் எந்தளவுக்கு அழகானதோ… அதே அளவுக்கு
ஆபத்தானதும்கூட! என்னுடைய பெயரை வைத்தே சிலர் ஏமாற்று வலை விரிப்பது எனக்கு
மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
ஏற்கனவே நான் சில நடிகைகளுக்கு என் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க
இருப்பதாக சிலர் தவறான தகவல்களைப் பரப்பினார்கள்.
அப்போதே இதுகுறித்து நான்
போலீசில் புகார் தெரிவித்தேன். தவறான தகவலைப் பரப்பியவர் மீது அப்போது
உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது மறுபடியும் கிளம்பி இருக்கும் இந்த மாதிரியான சர்ச்சைகள்
குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அத்தகைய மோசடிகளில் ஒருபோதும்
சிக்கிக் கொள்ளாதீர்கள்.
No comments:
Post a Comment