ரஜினி அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில் இருக்கு- கே.எஸ்.ரவிக்குமார்
ரஜினி நடித்த முத்து, படையப்பா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் 
கே.எஸ்.ரவிக்குமார். அடுத்தபடியாக ரஜினியை வைத்து ராணா என்ற பிரமாண்ட 
படத்தை இயக்க தயாரானார். ஆனால், அந்த நேரம்பார்த்து ரஜினிக்கு திடீர் 
உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த படம் டிராப் செய்யப்பட்டது. 
அதையடுத்து 
ரஜினி ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிசன் 
போட்டதால், பின்னர் மகள் செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்ற 
அனிமேசன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மேற்பார்வை இயக்குனராக 
பணியாற்றிய ரவிக்குமார், அடுத்தபடியாக ராணா படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக 
அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ரஜினி சாரை இரண்டு மூன்று நாளைக்கு ஒருமுறையாவது தொடர்பு கொண்டு பேசி விடுவேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் நெருக்கம் இருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் அரசியல் குறித்து ஒருபோதும் அவர் பேசினதில்லை. அதனால் அவர் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கு.

மேலும், யாராக இருந்தாலும் நிர்ப்பந்தம் என்று
 ஒன்று வருகிறபோதுதான் அரசியலுக்கு வருவார்கள். அப்படியொரு நிலை வந்தால் 
மட்டுமே ரஜினி அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்கிறார் 
ரவிக்குமார்

No comments:
Post a Comment