நயன்தாரா நோ நோ...அஞ்சலி யெஸ் யெஸ்...
டிபன், லஞ்ச், டின்னர் மூன்று வேளையும் நெருப்பு துண்டுகளைதான் சாப்பிடுவாரோ என்று ஐயுறுகிற அளவுக்கு படப்பிடிப்பில் படபடப்பாக இருப்பார் ஹரி. வண்டி வண்டியாக ஓனிக்ஸ் ஓட்டுகிற இவரது வாயிலிருந்து பாராட்டுகள் வந்தால் அது பூர்வஜென்ம புண்ணியம்.

இவரது தாறுமாறான திட்டுகளை தாங்கிக் கொள்கிற தைரியம்
உள்ளவர்கள் மட்டுமே படப்பிடிப்பில் தவறு செய்வார்கள். அப்படிப்பட்டவரிடம்
'ஆஹா' என்று பெயர் வாங்கியிருக்கிறார் அஞ்சலி. சிங்கம் பார்ட் 2
படத்திற்காக ஒரு சிங்கிள் டான்ஸ் ஆடியிருக்கிறார் இவர்.
முதலில் இதற்கு நயன்தாராவைதான் அழைத்தாராம்
ஹரி. ஆனால் அறிமுகப்படுத்திய குருநாதராச்சே என்பதையும் மறந்து 'ம்ஹூம்'
என்று கூறிவிட்டார் நயன். அந்த நேரத்தில்தான் 'நான்தான் இருக்கேன்ல' என்று
உள்ளே வந்தார் அஞ்சலி.
ஃபாஸ்ட் ஃபாஸ்ட் என்று
ஓடிக்கொண்டேயிருக்கும் ஹரி நினைத்ததை விட ஒரு நாள் முன்னதாகவே ஆடி
முடித்துக் கொடுத்தாராம் அஞ்சலி. அதற்காகதான் இந்த 'ஆஹா'.
No comments:
Post a Comment