March 10, 2013

கவுதம் மேனனுக்கு படம் திருப்பதி பிரதர்ஸ் திட்டம்

கடலுக்குள் இருக்கும் போது கம்பீரமாக இருந்த திமிங்கலம் கரை ஒதுங்கிய பிறகு காக்காவுக்கும் பூனைக்கும் கூட டிபனாக மாறிவிடுவதை பார்த்தால் லேசாக மனசில் ஷாக் அடிக்கும். அப்படி தன் கம்பீரத்தை இழந்த படைப்பாளியாகிவிட்டார் மணிரத்னம். இந்த நேரத்தில் இழந்த நஷ்டத்தை மீட்பதற்காக அவரை போலீஸ், கோர்ட் என்று கொண்டு வந்து நிறுத்தவும் துடிக்கிறார்கள் பணத்தை போட்டு ஏமாந்தவர்கள்.

'நானெல்லாம் மணி சார் படத்தை பார்த்து சினிமாவுக்கு வந்தவன். அவர்ட்ட பணத்தை திருப்பி கேட்க மாட்டேன்' என்று மூன்று ஏரியாவில் பணம் போட்டு முதலுக்கே மோசமான லிங்குசாமி சொல்கிறார் என்றால், அதுதான் ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளிக்கு தருகிற மரியாதை.
போகிற போக்கை பார்த்தால் 'மரியாதை ராமன்' என்று பட்டம் கொடுக்கிற அளவுக்கு அவரது செயல் இன்னும் இன்னும் மேலோங்கி நிற்கிறது. 

அதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தில். சூர்யா கால்ஷீட்டை யார் வாங்குவது என்பதில் பலத்த போட்டி. நேரடியாக களத்தில் இறங்கி போராடிய லிங்குசாமி, அந்த விஷயத்தில் கவுதமை வென்றது தனிக்கதை.இதில் அப்செட்டாகி இருந்த கவுதமுக்கு தனது நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்க சொல்லி கேட்டிருக்கிறாராம் 

லிங்கு. ஒரே நேரத்தில் ஐந்து படங்களை தயாரிக்கவிருக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், அதில் ஒரு படத்தைதான் இயக்க சொல்லி கேட்டிருக்கிறது கவுதம் மேனனிடம்.
ரஜினி & கே.வி.ஆனந்த் படம்
தனது மகள் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 'கோச்சடையான்' ரிலீஸ் வரைக்கும் தனது அடுத்த படத்தை பற்றி பேச வேண்டாம் என்று கூறிவிட்டார் ரஜினி. இதனால் ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் என்று இந்த வினாடி வரைக்கும் நம்பப்படும் கே.வி.ஆனந்த் அதை உறுதிப்படுத்த முடியாமல் மழுப்பலாகவே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் மீடியாவுக்கு.
ஆனால் கோச்சடையானை தயாரிக்கும் ஈராஸ் பட நிறுவனம், அடுத்ததாகவும் ரஜினியை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிப்பதாகவும்,

அதை கே.வி.ஆனந்த் இயக்குவதாகவும் தனது மேனேஜர் மூலம் அறிவித்துவிட்டது. ரஜினியின் கருத்தை மீறி இப்படியொரு அறிவிப்பு வர என்ன காரணம்? வேறொன்றுமில்லை, ஷேர் மார்க்கெட்டில் இந்நிறுவனத்தின் பங்குகள் உயர்வதற்காக செய்யப்பட்ட யுக்திதான் இது என்கிறார்கள். 

உங்க 'காளை-- கரடி' ஆட்டத்தில் சிவனேன்னு இருக்கிற முரட்டுக்காளைக்கு மூச்சு முட்ட வைக்கிறீங்களேப்பா...
 

பரதேசி படம் மார்ச் 15-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது

பாலா படங்களில் பெஸ்ட் இதுதான் என பலரும் பாராட்டி வரும் பரதேசி படம் வரும் மார்ச் 15-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தேதிகளை யூகமாகக் கூறி வந்த பாலாவும் அவரது குழுவினரும் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
பரதேசி படத்தை முதலில் பிவிபி நிறுவனம் தயாரித்தது. ஆனால் பட்ஜெட் எகிறியதால் பாலாவே, பி ஸ்டுடியோஸ் எனும் பேனரில் தயாரிக்கிறார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மறைந்த முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படம் ரெட் டீ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. 1930களில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாலு மகேந்திரா, மணிரத்னம், அனுராக் காஷ்யப் போன்றவர்கள் படத்தைப் பாராட்டியுள்ளனர்.
 
இந்த நிலையில், படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் இயக்குநர் பாலா. இதனால் பட வெளியீட்டை தள்ளி வைத்திருந்தார்.

 இப்போது வரும் மார்ச் 15-ம் தேதி படத்தை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளார் பாலா. படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜேஎஸ்கே பிலிம்ஸ் சதீஷ்குமார் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளார்.

 



கமலுக்கு அட்வைஸ் செய்த ரஜினிகாந்த்

 ரஜினி, கமல் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே சினிமாவில் ஒன்றாக நடித்தவர்கள். அதையடுத்து அவர்கள் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும், அவர்களுக்கிடையிலான நட்பு என்பது மாறாமலேயே இருந்து வருகிறது. அதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் விஸ்வரூபம் படத்துக்கு அரசு சார்பில் தடை விதிக்கப்பட்டபோது, 

முதல் ஆளாக அதற்கு குரல் கொடுத்தவர் ரஜினிதான். அதன்பிறகுதான் மற்ற திரையுலகினர் ஆதரவு கொடுத்தனர். அதையடுத்து, படம் வெளியாகி 200 கோடி வரை வசூலை ஈட்டியிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் இந்த சூழ்நிலையிலும், தான் குடியிருக்கும் வீட்டை தனியாரிடம் அடகு வைத்திருந்த கமல், அதை மீண்டு மீண்டும் வங்கியில் அடமானம் வைத்தார். இதனால் விஸ்வரூபம்தான் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறதே. இந்த நேரத்தில் அதற்காக மீண்டும் வீட்டை அடகு வைக்க வேண்டும் என்று கமலின் அபிமானிகள் பலருக்கு கேள்வி எழுந்தது. அதேகேள்வி ரஜினிக்கும் எழுந்திருக்கிறது. 

அதனால் சமீபத்தில் கமலை சந்தித்த அவர், படத்தில் கிடைத்த வருமானத்தைக்கொண்டு, அடமானம் வைத்த வீடு மற்றும் சொத்துக்களை மீட்டு பிள்ளைகளின் பெயரில் எழுதி வையுங்கள். இனிமேல் இதுபோன்று வீட்டை அடமானம் வைத்து படம் எடுத்ததையெல்லாம் வெளியில் சொல்ல வேண்டாம். உங்களுக்கு செட்டாகக்கூடிய தயாரிப்பாளர் யாரைவது வைத்து இனி படம் இயக்குங்கள் என்றும் கமலை உரிமையோடு கேட்டுக்கொண்டாராம் ரஜினி.

ரஜினியின் அன்பான அட்வைஸ்க்கு கமல் செவி சாய்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ரஜினி அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில் இருக்கு- கே.எஸ்.ரவிக்குமார் 

ரஜினி நடித்த முத்து, படையப்பா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். அடுத்தபடியாக ரஜினியை வைத்து ராணா என்ற பிரமாண்ட படத்தை இயக்க தயாரானார். ஆனால், அந்த நேரம்பார்த்து ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த படம் டிராப் செய்யப்பட்டது. 

அதையடுத்து ரஜினி ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிசன் போட்டதால், பின்னர் மகள் செளந்தர்யா இயக்கத்தில் கோச்சடையான் என்ற அனிமேசன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மேற்பார்வை இயக்குனராக பணியாற்றிய ரவிக்குமார், அடுத்தபடியாக ராணா படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில், ரஜினி சாரை இரண்டு மூன்று நாளைக்கு ஒருமுறையாவது தொடர்பு கொண்டு பேசி விடுவேன். அந்த அளவுக்கு எங்களுக்குள் நெருக்கம் இருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் அரசியல் குறித்து ஒருபோதும் அவர் பேசினதில்லை. அதனால் அவர் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கு. 

மேலும், யாராக இருந்தாலும் நிர்ப்பந்தம் என்று ஒன்று வருகிறபோதுதான் அரசியலுக்கு வருவார்கள். அப்படியொரு நிலை வந்தால் மட்டுமே ரஜினி அரசியலுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது என்கிறார் ரவிக்குமார்

பிரியாணி படப்பிடிப்பு டிராப்

அஜீத் நடித்த மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, அதையடுத்து இப்போது கார்த்தியை வைத்து பிரியாணி என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஆரம்பத்தில் கார்த்தியிடம் மொத்த கால்சீட்டாக 80 நாட்களை வாங்கியவர், அடிக்கடி படப்பிடிப்புக்கு லீவு விட்டதோடு, பல நாட்கள் கார்த்தியை ஸ்பாட்டில் சும்மாவே உட்கார வைத்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இதனால் நாட்கள்தான் வீணாய் போனதேயொழிய படம் வளர்ந்த பாடில்லையாம்.

அதேபோல், ஹன்சிகாவிடமும் மொத்த கால்சீட்டாக வாங்கியவர், இதுவரை ஒரு பாடல் காட்சியும், சில காட்சிகளையும் மட்டுமே படமாக்கியிருக்கிறாராம். இதனால் டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் ஹன்சிகா, அடுத்தபடியாக வேறு படங்களில் நடிப்பதற்கு தான் செல்லப்போவதாக கூறி வருகிறாராம். இதைப்பார்த்து, கடுப்பான கார்த்தி, இப்போது ராஜேஷ் இயக்கும் ஆல்இன்ஆல் அழகுராஜா படத்துக்கு கால்சீட் கொடுத்து நடிக்கத் தொடங்கி விட்டாராம்.

இதனால் கலவரமடைந்திருக்கிறார் வெங்கட்பிரபு. இதையடுத்து, படத்தை தயாரிக்கும் ஞானவேல்ராஜா யூனிட்டை தொடர்பு கொண்டு அவர் கேட்டபோது, இப்போதைக்கு டிராப் என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லிவிட்டார்களாம். இதனால் நான் என்ன தப்பு செய்தேன், எதற்காக இப்படி செய்தீர்கள் என்று வெள்ளந்தியாய் கேட்டுக்கொண்டு நிற்கிறாராம் வெங்கட்பிரபு. ஆனால் அவருக்கு பதில கொடுக்க யாரும் தயாராக இல்லையாம்.

ஆஸ்தான டைரக்டரிடம் டென்சன் காட்டி வரும் அமலாபால்

வீரசேகரன் படத்தில் அறிமுகமான அமலாபால், அதையடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் காமக்கொடூர நடிகையாக அவதரித்தார். அதன் பின்னர் மைனா அவருக்கு கைகொடுத்ததால் நல்ல நடிகை என்ற முத்திரை விழுந்தது. 

அதையடுத்து, மார்க்கெட்டை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர், தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற சில படங்களுக்குப்பிறகு, சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நிமிர்ந்து நில் என்ற படத்தில் நடித்து வந்தார். அந்த நேரம் பார்த்து அவரே எதிர்பாராத வகையில் அவரது அபிமானத்துக்குரிய டைரக்டர் விஜய் இயக்கும் தலைவா படத்தில் இளையதளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அரிய வாய்ப்பினை பெற்றார்.

அமலாபாலின் கேரியரில் தலைவா மிக முக்கியமான படம் என்பதால், தெலுங்கு படங்களுக்கு கொடுத்திருந்த கால்சீட்டைகூட அட்ஜஸ்ட் பண்ணி வாங்கி தலைவாவில் கமிட்டானார். இதனால் திடுதிப்பென்று விஜய்யுடன் அமலாபால் ஜோடி சேர்ந்ததால் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளெல்லாம் ஆச்சரியமாய் அவரை பார்த்தனர். 

ஆனால் அந்த ஆச்சர்யம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. இப்போது அதே படத்தில் முக்கிய நாயகியாக பாலிவுட் நடிகை ராகினி நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் அமலாபால். ஆனால், இந்த நேரத்தில் அவரது கோலிவுட் அபிமானிகள் ஆளாளுக்கு போன் போட்டு, அப்படியா சங்கதி? இன்னொரு நடிகையும் இந்த படத்தில் இருக்கிறாராமே? என்று அமலாவுக்கு போன்போட்டு துக்கம் விசாரிப்பது போல விசாரிக்கிறார்களாம். 

இதனால் சில தினங்களாக ஏதோ பேசி சமாளித்து வந்த நடிகை, இப்போது தனது போனையே சுவிட் ஆப் செய்து விட்டாராம். அதோடு, தனது ஆஸ்தான டைரக்டரான விஜய்யிடமும் இப்போது முகம் கொடுத்தே பேசாமல் விலகிய நிற்கிறாராம் அமலாபால்.

March 9, 2013

இறுதிக் கட்டத்தில் தலைவா… படப்பிடிப்புக்கு ஆஸ்திரேலிய செல்லும் இளைய தளபதி

தன் ரசிகர்களைத் தவிர, மற்றவர்களும்கூட தன்னை தலைவா என்றழைக்க என்ன வழி என்று ரூம் போட்டு யோசித்து, தன் படத்துக்கு தலைப்பு வைத்த விஜய் அன்ட் கோ, படத்தை முடிக்கும் வேலைகளில் படுபிஸியாக உள்ளது.
இப்போது படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறார்கள். 

ஏ எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அமலா பாலுடன் விஜய் டூயட் பாடும் காட்சிகள் ஸ்பெயினில் படமாக்கப்பட்டன. பின்னர் மீண்டும் மும்பைக்கே திரும்பிய படக்குழு அங்கு வைத்து விஜய் – மும்பை நடிகை ராகினி நந்த்வானி நடிக்கும் காட்சிகளைப் படமாக்கினர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக வரும் 15ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது படக்குழு. அங்கு ஒரு மாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு திரும்புகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. 

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படுகிறது.

சினிமா வாய்ப்பு தருவதாக என் பெயரில் மோசடி: டைரக்டர் சசிகுமார் அறிக்கை


சினிமா டைரக்டர் எம்.சசிகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

“சினிமா என்கிற பிரமாண்ட உலகை நோக்கி ஆர்வத்தோடு வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரவேற்கத்தக்கத்துதான். ஆனாலும், எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்கிற ஆவலில் தவறான ஆட்களை நம்பி சிலர் ஏமாந்துவிடுவது வருத்தமளிக்கிறது.

சமீபத்தில் என் பெயரைச் சொல்லி சிலர் சினிமா வாய்ப்புத் தருவதாக சிலரைத் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். எப்போதுமே என்னுடைய படங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது நேரடியாக என் கம்பெனிக்கே அழைத்துப் பேசுவதுதான் வழக்கம்.

போனிலோ, இமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளும் வழக்கம் கிடையாது. என் பெயரில் போலி இமெயில் முகவரிகளையும், பேஸ்புக், டுவிட்டர் கணக்குகளையும் சிலர் ஆரம்பித் திருக்கிறார்கள். இதுநாள் வரை சமூக வலைத்தளங்கள் எவற்றிலுமே நான் இல்லை.

அதனால், வலைத்தளத் தகவல்களையோ இமெயில்களை வைத்தோ என் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகச் சொல்லப்படுவதை யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக, சினிமாவை நோக்கி வரும் பெண்கள் இந்த விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.

காரணம், சினிமா உலகம் எந்தளவுக்கு அழகானதோ… அதே அளவுக்கு ஆபத்தானதும்கூட! என்னுடைய பெயரை வைத்தே சிலர் ஏமாற்று வலை விரிப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
ஏற்கனவே நான் சில நடிகைகளுக்கு என் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க இருப்பதாக சிலர் தவறான தகவல்களைப் பரப்பினார்கள். 

அப்போதே இதுகுறித்து நான் போலீசில் புகார் தெரிவித்தேன். தவறான தகவலைப் பரப்பியவர் மீது அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது மறுபடியும் கிளம்பி இருக்கும் இந்த மாதிரியான சர்ச்சைகள் குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அத்தகைய மோசடிகளில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

 

சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் ஜூலையில் வெளியாகும் – தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படமான ரஜினியின் கோச்சடையான் வரும் ஜூலை மாதம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் அறிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தீபிகா படுகோன் ஜோடியாக நடிக்க, அவர்களுடன் சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட இந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் கைகோர்த்துள்ள படம் கோச்சடையான். அவதார் படம் போல, 3 டியில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. 

 இந்திய சினிமாவில் இந்த தொழில்நுட்பத்தில் வரும் முதல் படம் இது. 3டி வசதி இல்லாத அரங்குகளுக்காக 2டியிலும் இந்தப் படம் வருகிறது. லண்டன், கேரளா மற்றும் சென்னை ஸ்டுடியோக்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் படம் வெளியாகும் தேதி குறித்து உறுதியாக எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது. 

மேலும் இந்தப் படம் தொடர்பாக இதுவரை இரண்டு ஸ்டில்கள் மட்டுமே வெளியாகியுள்ளன. மற்றதெல்லாம் பிரஸ்மீட் ஸ்டில்கள்தான். தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பான் மற்றும் தெலுங்கில் வெளியாகும் கோச்சடையான், வெளியீட்டுத் தேதி குறித்து தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறுகையில், “படத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் கணிசமாக நேரம் எடுக்கின்றன.

தி அவெஞ்சர்ஸ் படத்துக்கு 3 டி மற்றும் அதற்கான ஸ்டீரியோ டி ஒலி தொழில் நுட்பத்தைக் கொடுத்த ஹாலிவுட் குழுவினர் இந்தியா வந்து கோச்சடையானுக்கு, அதே தொழில்நுட்பங்களைச் செய்து வருகின்றனர். தாமதத்துக்கு இது ஒரு முக்கிய காரணம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே தன்னைப் பற்றியோ தன் படங்கள் பற்றியோ பெரிதாக புகழ மாட்டார். 

அடுத்தவர்கள் சொன்னாலும் அமைதியாக இருந்துவிடுவார்.
ஆனால் அவரே படத்தைப் பார்த்து வியந்தார். இயக்குநர் ரவிக்குமாரும் நினைத்ததை விட 10 மடங்கு பிரமாதமாக வந்திருப்பதாகப் பாராட்டினார். இந்தப் படம் திரைக்கு வரும்போது, இன்னும் மேம்பட்ட வடிவில் இருக்கும். அதற்கான வேலைகள் வேகமாக நடக்கின்றன. ரஜினி சார் சாதாரண ஹீரோ அல்ல. இந்திய சினிமாவில் வேறு எவர் படங்களுக்கும் இல்லாத முக்கியத்துவம் அவரது படங்களுக்கு மட்டுமே உண்டு. இதையெல்லாம் விட முக்கியம், 

ரஜினி சார் உடல்நிலை சரியான பிறகு வரும் முதல் படம் கோச்சடையான்தான். எனவே அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு எப்படி இருக்கும் என்பது புரிந்து, அதையெல்லாம் ஈடுகட்டும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி. இந்தப் படத்துக்கு அதைவிட அதிகம் செலவு செய்தாலும் நியாயம்தான். ஜப்பானில் ரிலீஸ் செய்யும் உரிமை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். 

இந்தியாவில் இந்தப் படத்துக்கான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை,” என்றார்.பட வெளியீட்டுத் தேதி குறித்துப் பேசியுள்ள முரளி மனோகர், “ஜூலை மாதம் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறோம். ஏப்ரலுக்குள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்துவிடும். 

இதுகுறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை ஸ்டுடியோ டி நிறுவனத்திடமே விட்டுவிட்டோம் (போஸ்ட் புரொடக்ஷன் பொறுப்பேற்றுள்ள நிறுவனம்). படத்தின் நீளம் 2 மணி 5 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும்,” என்றார். இத்தாலிய, ப்ரெஞ்ச் மொழிகளிலும் கோச்சடையான் வெளியாகப் போகிறது.

March 5, 2013

அஜீத் படத் தலைப்பு ‘வலை’

விஷ்ணு வர்தன் நடிப்பில் கடந்த 6 மாதங்களாக உருவாகி வரும் அஜீத் படத்துக்கு வலை என்ற தலைப்பு இன்று உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த புதிய டிசைன்கள் மற்றும் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளன. அஜீத் – நயன்தாரா, ஆர்யா – டாப்ஸி நடிக்கும் இந்தப் படத்தை ஏஎம் ரத்னம் தயாரிக்கிறார். 

இந்தப் படம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் தலைப்பை ரகசியமாக வைத்திருந்தனர். காரணம், பெயரை முதலிலேயே அறிவித்துவிட்டால், ரசிகர்கள் ஆர்வத்தில் அந்தப் பெயரில் பேஸ்புக், இணையதளங்களில் புதிய சைட்கள் தொடங்கிவிடுகிறார்களாம். 

இதைத் தவிர்க்கவே பெயரை வெளியில் சொல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் இன்று படத்தின் போஸ்டர் மற்றும் டிசைன் வெளியாகியுள்ளது. மங்காத்தா ஹேர் ஸ்டைலில், டுகாட்டி பைக்கில் அமர்ந்தபடி அஜீத் போஸ் கொடுக்கும் இந்த போஸ்டரில், வலை என்று படத்தின் தலைப்பு டிசைன் செய்யப்பட்டுள்ளது. அஜீத்தின் ஆஸ்தான இசையமைப்பாளராகிவிட்ட யுவன் சங்கர் ராஜா இசமையமைத்துள்ளார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டை நடத்தவிருக்கிறார்கள்.

விஸ்வரூபத்துக்கு தியேட்டர் தர விடாமல் தடுத்தது யார்?

டெல்லி: விஸ்வரூபம் படத்துக்கு தியேட்டர்கள் தரக்கூடாது என தடுத்தவர்கள் யார் என்ற விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப் போவதாக இந்திய போட்டி ஆணையம் (The Competition Commission of India) அறிவித்துள்ளது. கமல்ஹாஸன் தனது விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியாகும் முன்பு டிடிஎச்சில் வெளியிடப் போவதாக அறிவித்தார். இதனால் கோபமடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், அந்தப் படத்தை எந்தத் தியேட்டரிலும் வெளியாக அனுமதிக்க மாட்டோம். அரங்குகள் தரமாட்டோம் என்றனர். இது தனது வியாபாரம் செய்யும் உரிமையை தடுக்கும் செயல் என்று கமல்ஹாஸன் புகார் தெரிவித்தார். 

இந்திய போட்டி ஆணையத்திடம் எழுத்து மூலமாக புகாரும் கொடுத்தார். அத்துடன் திரையரங்க உரிமையாளர் சங்கம் வெளியிட்ட தீர்மான நகலையும் இணைத்திருந்தார். அதில் டிடிஎச் அல்லது வேறு தொழில்நுட்பத்தில் வெளியாகும் எந்தப் படங்களுக்கும் ஒத்துழைப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து போட்டி ஆணையம் திரையரங்கு உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும், திரையரங்க உரிமையாளர் அமைப்பின் தீர்மானம் தொழில் செய்யும் உரிமைக்கு விரோதமானதாக போட்டி ஆணையம் கருதியது. எனவே இதில் கமல்ஹாஸனின் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதாகக் கருதுவதால், டைரக்டர் ஜெனரல் தலைமையில் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் அறிக்கை தர உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்தப் புகாரைக் கொடுத்த சில தினங்களில் திரையரங்க உரிமையாளர்களுடன் சமாதானமாகிவிட்டார் கமல்ஹாஸன்.

‘நாங்கள் அண்ணன் தம்பிகள், மாமன் மச்சான்கள்… நாங்கள் இப்படித்தான் அடிக்கடி உரிமையாய் சண்டை போட்டுக் கொள்வோம்.. பிறகு கூடிக் கொள்வோம். இது என்னுடைய குடும்பம்,’ என்று கூறினார். அவர்களும் 500 ப்ளஸ் அரங்குகளை இந்தப் படத்துக்கு ஒதுக்கிக் கொடுத்தனர். ஆனால் அந்த புகாரை மட்டும் கமல் வாபஸ் பெறவில்லை! இப்போது அந்தப் புகார் மீதான விசாரணை அறிக்கையை விரைவில் வெளியிடப் போவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.