January 14, 2013
தியேட்டரில் வெளியான ஒருவாரத்திற்கு பின்னர் பிப்-2.,ம் தேதி
டி.டி.எச்.-இல் விஸ்வரூபம் படம் வெளியாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் முதலிலும், பின்னர் தியேட்டரிலும்
வெளியிடப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்த கமல், அதன்பிறகு
தியேட்டர் உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக முடிவு
ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டையும் ஒரே நாளில் வெளியிட இருப்பதாக சொன்னார்.
இதற்கு தியேட்டர், டிடிஎச் இரண்டு தரப்பிலுமே பலத்த எதிர்ப்பு கிளம்ப ஜன.,
25ம் தேதி தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டரில் விஸ்வரூபம் படம்
வெளியிடப்படும் என்று அறிவித்தார். தியேட்டர் உரிமையாளர்களும் கமலுக்கு
பக்கபலமாக இருந்து அவருக்கு வெற்றியை தேடி தருவோம் என்று குரல்
கொடுத்தனர். அதேசமயம் டிடிஎச்சில் வெளியிடுவது பற்றி எந்த அறிவிப்பையும்
வெளியிடாமல் இருந்து வந்தார் கமல்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment