February 22, 2013

டோலிவுட்டை பரபரக்க வைத்த அல்லு அர்ஜூன் - அமலா லிப் Kiss...

 

டோலிவுட்டில் இப்போதாய பரபரப்பு அல்லு அர்ஜுடன் அமலா பால் நடத்திய லிப் லாக்-தான். பூரி ஜெகன்னாத் இயக்கும் புதிய படமான 'இத்தரம்மாயிலதோ' படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக
 நடித்து வருகிறார் அமலா பால்.

இதில ஒரு படு ஹாட்டான ரொமான்ஸ் காட்சியில் இருவரும் உதட்டோடு உதடு நீண்ட முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம்.

இந்தக் காட்சியை இங்கு வைத்து படமாக்கினால் பரபரப்பு எகிறிவிடும் என்பதால், ஸ்பெயினில் வைத்து ஷூட் செய்தார்களாம்.

இந்தக் காட்சியில் கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் ஆக வேண்டும் என்பதற்காக இருவரும் செட்டில் நீண்ட நேரம் 'பேசி' தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்களாம்.

அமலா பாலுக்கு முத்தக் காட்சியில் நடிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே ஆர்யாவுக்கு தன் உதடுகளைக் கொடுத்த அனுபவம் உண்டு.

அல்லு அர்ஜுனுடனான இந்த முத்தக் காட்சி ஸ்கிரீன் பற்றிக் கொள்ளும் என்று பரபரக்கிறது தெலுங்கு பத்திரிகையுலகம்!!

 




தலைவா அரசியல் படமா? விஜய் விளக்கம்

 

விஜய் நடித்த துப்பாக்கி படம் 100 நாட்களை தாண்டி ஓடுகிறது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது.
இந்தியில் கஜினி, 3 இடியட்ஸ், தபாங், ரவுடிரத்தோர், ரெடி படங்கள் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்தன. அந்த பட்டியலில் விஜய்யின் துப்பாக்கி படமும் சேர்ந்துள்ளது.

இதுகுறித்து விஜய் அளித்த பேட்டி வருமாறு:-
துப்பாக்கி படத்தின் வசூல் ரூ. 100 கோடி தாண்டி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தியேட்டர்களுக்கு அதிக இளைஞர்கள் வருகை, பெரிய வியாபாரம் மர்டிபிளக்ஸ் தியேட்டர்கள் போன்ற பல காரணங்களால் இது சாத்தியமாகி உள்ளது.

துப்பாக்கி படத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் எனக்கு பொறுப்பு கூடி இருக்கிறது. இன்னும் நல்ல படங்கள் பண்ணுவேன். நான் நடித்துக் கொண்டிருக்கும் தலைவா படம் அரசியல் படம் அல்ல. அரசியல் சம்பந்தமான காட்சிகள் எதுவும் இல்லை. படம் பார்க்கும்போது தலைவா என்ற தலைப்பு வைத்ததன் நோக்கம் தெரியவரும்.

துப்பாக்கி படப்பிடிப்பில் இருந்தபோதுதான் இயக்குனர் ஏ.எல்.விஜய் தலைவா படத்தின் கதையை சொன்னார். அவர் ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும் விதம் வித்தியாசமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா படத்துக்கு பெரிய ப்ளஸ் காட்சிகளை புதுமையாக உருவாக்குகிறார். படம் சிறப்பாக வந்துள்ளது.
பாசில், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் என பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்துள்ளேன். நேசன் இயக்கும் ஜில்லா படமும் அந்த வரிசையில் வரும்.

100 நாளைத் தாண்டிய துப்பாக்கி, வெற்றி விழாவை  திட்டமிடும் இளையதளபதி ரசிகர்கள்....

  

துப்பாக்கி படம் 100வது நாளை கொண்டாடி உள்ளது. வசூல் ரீதியாக மட்டும் இல்லாமல், துப்பாக்கி படம் 100வது நாளையும் எட்டியுள்ளதால் இந்த 100வது நாளை ஒரு பெரிய விழாவாக எடுத்து கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

சுமார் ரூ.70 கோடி செலவில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இப்படம் முதல் இரண்டு வாரத்திலேயே போட்ட பணத்திற்கு மேல் வசூலை அள்ளியது. மேலும் ரூ.200கோடியை வசூலைத் தாண்டும் என்றும் சொல்லப்படுகிறது.சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வில் தயாரிப்பாளர் தாணு அதுவரை துப்பாக்கி வசூல் 180கோடியைத் தாண்டியுள்ளதாக சொல்லியுள்ளார்.

ஆரம்பத்தில் தலைப்பு பிரச்சினை, பணப்பிரச்சனை பின்னர் படம் வெளியான பின்னர் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு என்று பல பிரச்சினைகளை சந்தித்த துப்பாக்கி படம் எதிர்ப்புகளையும் கடந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டாகியுள்ளது. சென்ற வருடம் விஜய்க்கு நண்பன், துப்பாக்கி என்று இரு மெகா ஹிட் படங்கள் அமைந்ததில் மனுஷன் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறார்.

பட வெற்றி அணைத்து தரப்பினரையும் மகிழ்வில் ஆழ்த்தி இருப்பதால் துப்பாக்கி வெற்றி விழா வெகு விமர்சையாக நடக்கப்போகிறது. படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களையும் அழைத்து நினைவு பரிசு வழங்க இருக்கிறார்கள்.

கடைசியாக விஜய் நடித்த காவலன்,வேலாயுதம், நண்பன், துப்பாக்கி போன்ற படங்கள் ஹிட் அடித்துள்ளதால் விஜய்யின் இரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். துப்பாக்கி வெற்றி விழாவை எவ்வாறு வித்தியாசமாகக் கொண்டாடலாம் என்று அவர்கள் ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே தமிழில் ஹிட் அடித்த துப்பாக்கி படத்தை இப்போது ஹிந்தியில் அக்ஷ்ய் குமாரை வைத்து ரீமேக் செய்து வருகிறார் முருகதாஸ். அந்தப் படத்திற்கு அக்ஷ்ய் குமாரின் சம்பளம் மாத்திரம் 50கோடியாம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கொண்டாடிய துப்பாக்கி 100வது நாள்