February 22, 2013

அஜீத்தின் “Ducati பைக்

 விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும், “வலை படப்பிடிப்பு மும்பையை தொடர்ந்து, இப்போது துபாயில் நடந்து வருகிறது. மொத்தம், 20 நாட்கள் அங்கு முகாமிட்டு, இரண்டு அதிரடியான சண்டை காட்சிகளை படமாக்குகின்றனர்.

இதில் அஜீத்துக்கு பயிற்சி கொடுக்க, ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாராம். ஏற்கனவே, பைக் ரேஸ்களில் கலந்து கொண்ட அஜீத்தை, ஒரு சண்டை காட்சியில் “டுகாட்டி என்ற ரக மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி, சண்டை செய்ய வைத்துள்ளார்களாம். “200 சிசி திறன் கொண்ட அந்த பைக்கை ஓட்டியபடி, அசத்தலாக நடித்தாராம் அஜீத். அவர் ஒரு சிறந்த பைக்ரேஸ் வீரர் என்பதால் மட்டுமே, இதுபோன்ற சண்டை காட்சியில் அவரால் நடிக்க முடிந்தது என்கின்றனர்.

பிரபுதேவா தாளத்திற்கு ஆடப்போகும் கங்னம் ஸ்டைல் புகழ் psy

 டெல்லி: கங்னம் ஸ்டைல் பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற தென்கொரிய கலைஞர் பிஎஸ்ஒய் பிரபுதேவாவின் தாளத்திற்கு ஆடவிருக்கிறார். பிரபுதேவா நடித்த 3டி டான்ஸ் படம் ஏபிசிடி. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழிலும் ரிலீஸானது. டான்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபுதேவாவின் டான்ஸ் திறமை பாராட்டப்பட்டது. 

இந்நிலையில் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தென் கொரிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று யுடிவி மோஷன் பிக்சர்ஸுடன் பேசி வருகிறது. கொரிய மொழியில் பிரபுதேவாவின் கதாபாத்திரத்தில் கங்னம் ஸ்டைல் புகழ் பிஎஸ்ஒய் நடிப்பாராம். இது குறித்து யுடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூர் கூறுகையில், ஏபிசிடியின் உரிமையை வாங்க தென்கொரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இப்போதைக்கு இது குறித்து எதுவும் கூற முடியாது. இப்படத்தின் உரிமையைக் கேட்டு பலர் எங்களை அணுகுகின்றனர். படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என்றார்.

நல்ல நேரம், அன்னை ஓர் ஆலயம் படங்களில் நடித்த யானை 'ரதி' மரணம்!

 

சென்னை: எம்ஜிஆர் நடித்த நல்ல நேரம், ரஜினியின் அன்னை ஓர் ஆலயம் படங்களில் நடித்த யானை ரதி மரணமடைந்தது. கடந்த 1942-ம் ஆண்டு முதுமலை வனப்பகுதியில் யானை குழியில் தவறி விழுந்த குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டது. பின்னர் அந்த யானைக்கு ரதி என்று பெயர் சூட்டினர். அமரர் எம்.ஜி.ஆர். நடித்த நல்லநேரம், ரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயம் மற்றும் கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட சினிமாப்படங்களிலும் நடித்துள்ளது. தற்போது இந்த யானைக்கு 81 வயது. இந்த யானை மொத்தம் 13 குட்டிகளை ஈன்றது. இந்த ரதி யானைக்கு முதுமலையின் மூதாட்டி என்ற செல்லப் பெயரும் உண்டு. இந்த யானைக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படுக்கையில் கிடந்த இந்த யானை சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை மரணமடைந்தது.